×

இன்று என்.எம்.எம்.எஸ் தேர்வு: 4824 மாணவர்கள் எழுதுகின்றனர்

ஈரோடு, டிச. 1: ஈரோடு மாவட்டத்தில் இன்று நடைபெற உள்ள தேசிய வருவாய் வழி திறன் தேர்வினை 18 மையங்களில் 4824 மாணவர்கள் எழுத உள்ளனர். மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தி வருகிறது. இத்தேர்வை 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் எழுதலாம். இத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மாதம் ரூ.1,000 வீதம் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் என பிளஸ் 2 படிப்பு முடியும் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்தேர்வு தமிழகத்தில் 533 மையங்களில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 292 மாணவ, மாணவியர்கள் எழுத உள்ளனர். காலையில் மனத்திறன் தேர்வும், பின்னர் படிப்பறிவுத்தேர்வும் நடக்க உள்ளது.  ஈரோடு மாவட்டத்தில் இத்தேர்வினை ஈரோடு, கோபி, பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 18 மையங்களில் 4824 மாணவ, மாணவியர்கள் எழுத உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்வுக்கான ஏற்பாடுகளை மாவட்ட கல்வித்துறை நிர்வாகம் செய்துள்ளது.

Tags :
× RELATED 2 டன் ரேஷன் அரிசியை மாவோயிஸ்ட் தனிப்பிரிவு போலீசார் பறிமுதல்