×

புகையிலை பொருட்கள் விற்ற இருவர் கைது

 

ஈரோடு, மே 22: ஈரோடு வடக்கு போலீசார் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட குமலன்குட்டை பகுதியில் நேற்று முன்தினம் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள மளிகை கடை ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கடை உரிமையாளரான பூபதி ராஜ் (44) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 200 கிராம் புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதேபோல, வெள்ளித்திருப்பூர் போலீசார் ஒலகடம் பகுதியில் மேற்கொண்ட சோதனையில், அப்பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களான பான்மசாலா, குட்கா போன்றவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கடை உரிமையாளரான ஒலகடம், மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த விஜயன் (46) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர் விற்பனைக்கு வைத்திருந்த 60 கிராம் புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

The post புகையிலை பொருட்கள் விற்ற இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode North police ,Kumalankuttai ,Dinakaran ,
× RELATED வெளி மாநில லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது