×

சித்தோடு அருகே கார்கள் மோதி விபத்து

 

பவானி, மே 22: கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலையில் மூன்று கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து சென்று கொண்டிருந்தன. சித்தோட்டை அடுத்த கங்காபுரம் அருகே சென்றபோது முன் சென்று கொண்டிருந்த காரின் டிரைவர் திடீரென பிரேக் பிடித்தார். இதனால், அந்த காருக்கு பின்னால் வந்த கார் மோதியதில் சாலையின் நடுவே உள்ள தடுப்பின் மீது ஏறி நின்றது.

தொடர்ந்து வந்த இரு கார்கள் அடுத்தடுத்து பின்னால் மோதியது. இதில், காரில் சென்ற 10க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்த தகவலின் பேரில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அப்பகுதியில் நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

The post சித்தோடு அருகே கார்கள் மோதி விபத்து appeared first on Dinakaran.

Tags : Chithod ,Bhavani ,Coimbatore-Salem National Highway ,Chithot ,Gangapuram ,Dinakaran ,
× RELATED பவானி ஆற்றினை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரைகள் அகற்றம்