×

மாநில அளவிலான கபடி போட்டி

சத்தியமங்கலம், டிச. 1:  மாநில அளவிலான கபடி போட்டி சத்தியமங்கலம் காமதேனு கலை கல்லூரியில் நடந்தது.  காமதேனு கல்லூரி நிறுவனர் பெருமாள்சாமி பவளவிழாவையொட்டி மாநில அளவிலான கபடி போட்டி சத்தியமங்கலம் காமதேனு கல்லூரியில் நடந்தது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் இருந்து ஆண்கள் பிரிவில் 60 அணிகளும், பெண்கள் பிரிவில் 30 அணிகளும் பங்கேற்றன. இதில் ஆண்கள் பிரிவில் சத்தியமங்கலம் காமதேனு கல்லூரி முதல் பரிசும், கடலூர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 2ம் பரிசும், திருச்சி மணப்பாறை பிரண்ட்ஸ் கிளப் அணி 3ம் பரிசும் பெற்றது. மகளிர் பிரிவில் புஞ்சைபுளியம்பட்டி திருவள்ளுவர் கல்லூரி அணி முதல் பரிசும், திருச்சி ஹோலி கிராஸ் அணி 2ம் பரிசும், திருச்சி ராக் ஸ்போர்ட்ஸ் அணி 3ம் பரிசும் பெற்றது.

 இதில் சிறப்பிடம் பெற்ற அணிகளுக்கு பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கல்லூரி நிறுவனர் பெருமாள்சாமி ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். விழா ஏற்பாடுகளை கல்லூரி செயலாளர் மலர்ச்செல்வி, கல்லூரி முதல்வர் செந்தில்குமார், துணை முதல்வர் நாகராஜ் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags : kabaddi competition ,
× RELATED துறையூர் அருகே பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கிடையே மண்டல அளவில் கபடி போட்டி