×

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் அழிந்து வரும் பாய் தயாரிப்பு தொழில்

பாப்பிரெட்டிப்பட்டி, நவ.29: பாப்பிரெட்டிப்பட்டி அருகே, பொ.துறிஞ்சிப்பட்டியில் அழிந்து வரும் நிலையில் உள்ள பாய் தயாரிப்பு தொழிலை பாதுகாக்க, மின்கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொம்மிடி அருகே பொ.துறிஞ்சிப்பட்டி பகுதியில் சுமார் பத்தாயிரம் பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பெரும்பாலும், பாய் தயாரிப்பு தொழில் ஈடுபட்டுள்ளனர். இதனால், 50க்கும் மேற்பட்டோர் பாய் உற்பத்தியை குடிசை தொழில் ேபால் செய்து வருகின்றனர். இங்கு தயார் செய்யப்படும் பாய்கள், திருமண நிகழ்வுகளுக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், இத்தொழில் அழியும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது குறித்து பாய் உற்பத்தியாளர்கள் சமன் பாஷா கூறுகையில், ‘மத்திய அரசு ஜிஎஸ்டி வரி, மின் கட்டணம், தொழிலாளர்களின் கூலி ஆகியவற்றால், பாய் தயாரிக்கும் தொழில் நலிந்து வருகிறது. தற்போது ஒரு பாய் ₹105 முதல் ₹150 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதற்கான கோரை புற்களை கரூரில் இருந்து ஒரு டன் ₹1200 முதல் ₹2 ஆயிரம் ஆயிரம் வரை விலைக்கு வாங்கி, சாயம் போட்டு பாய்களாக நெய்து வருகிறோம். இங்கு தயாரிக்கப்படும் பாய்களை, தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, போன்ற பங்வேறு மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்கிறோம். ஜவுளி தொழில்களுக்கு, தமிழக அரசு சலுகை முறையில் மின் கட்டணம் வழங்குவது போல், பாய் தொழிலுக்கும் மின்கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும்,’ என்றார்.


Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா