×

ஓசூர் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு கண்டுணர்வு சுற்றுலா

ஓசூர், நவ.29: ஓசூர் வட்டாரத்தில், அட்மா திட்டத்தின் கீழ் சித்தனப்பள்ளி, நந்திமங்கலம் கிராமத்தில் உள்ள விவசாயிகள், எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மையத்திற்கு, உள்மாவட்ட அளவிலான கண்டுணர்வு சுற்றுலா செல்லப்பட்டனர்.  இதில் 50 விவசாயிகள் கலந்து கொண்டனர். இச்சுற்றுலாவில் விவசாயிகளுக்கு வேளாண் அறிவியல் மைய பேராசிரியர் சுந்தர்ராஜ்,  இயற்கைமுறையில் பூச்சி மற்றும் நோய்கள் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி விளக்கம் அளித்தார். சொட்டுநீர் பாசனத்தின் முக்கியத்துவம் மற்றும் தேனீ வளர்ப்பினால் உண்டாகும் பயன்கள் மற்றும் முக்கியத்துவம் பற்றி, விவசாயிகளுக்கு ரமேஷ்பாபு விளக்கமளித்தார். மேலும், அசோலா வளர்ப்பு படுக்கை, ஒருங்கிணைந்த பண்ணைய செயல்விளக்க திடல்களை விவசாயிகள் பார்வையிட்டனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகுணா நன்றி கூறினார். உதவி தொழில்நுட்ப மேலாளார் மீனாசுற்றுலாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.


Tags : Hosur Region ,
× RELATED ஓசூர் வட்டாரத்தில் திட்டப்பணிகள் ஆய்வு