×

நீர்வழிப்பாதையில் ஆக்கிரமிப்புகளால் வறண்டு கிடக்கும் கன்னிமார் ஓடை

சேலம், நவ.29: நீர்வழிப்பாதை ஆக்ரமிப்புகளால், சேலம் கன்னிமார் ஓடைக்கு நீர்வரத்தின்றி வறண்டு கிடக்கிறது.சேலம் ஜருகுமலையில் இருந்து வழிந்தோடும் மழைநீரானது கன்னிமார் ஓடைக்கு வருகின்றன. இந்த ஓடையில் இருந்து வழிந்தோடும் மழைநீர் உடையாப்பட்டி பெருமாள் கோயில், காமராஜர் நகர் காலனி, தெற்கு அம்மாப்பேட்டை வழியாக சுமார் 6 கி.மீ., தூரம் பயணம் செய்து குமரகிரி ஏரியை அடைகிறது. சமீப காலமாக ஜருகு மலையில் பெய்யும் மழைநீரானது முறையாக கன்னிமார் ஓடைக்கு வருவதில்லை. இதனால் பெரிய அளவில் மழை பெய்தாலும் கன்னிமார் ஓடை வறண்டு தான் காணப்படுகிறது. எனவே, நீர்வழிப்பாதையில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ஜருகுமலையில் இருந்து வழிந்தோடும் மழைநீரானது கன்னிமார் ஓடைக்கு வருகிறது. இந்த நீரை கொண்டு கடலைக்காய், மரவள்ளிக்கிழங்கு, மஞ்சள், கரும்பு  உள்பட பல்வேறு வகையான பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. சமீப காலமாக கனமழை பெய்ததாலும் ஓடை ஆக்கிரமிப்பால் தண்ணீர் வருவதில்லை. எனவே, ஆக்ரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.



Tags : stream ,waterway ,
× RELATED வத்திராயிருப்பு அருகே பாப்பநத்தம் ஓடையில் பெருக்கெடுத்த வெள்ளம்