×

மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு அமமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு

ஈரோடு, நவ. 29: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி ஈரோடு அருகே திண்டலில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. இந் நிகழ்ச்சியில், காசிபாளையம் பகுதி செயலாளர் பி.மோகன்குமார் மாநகராட்சி 56வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுவினை ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் தங்கராஜிடம் வழங்கினார். மேலும், காசிபாளையம் பகுதியில் உள்ள 54வது வார்டுக்கு செல்வரத்தினம், 55வது வார்டுக்கு ஜெகதீஸ்வரி, 57வது வார்டுக்கு பொன்குப்புசாமி, 58வது வார்டுக்கு ஈ.ஆர்.கே.ஜெய்பாலாஜி, 59வது வார்டுக்கு ஜெயசந்திரமோகன், 60வது வார்டுக்கு கந்தசாமி, 49வது வார்டுக்கு அன்னபூரணி ஆகியோர் விருப்பமனுவினை மாநகர் மாவட்ட செயலாளர் தங்கராஜிடம் வழங்கினர்.இதில், உத்தமன், எஸ்.குமார், சண்முகம், வினோத்குமார், ஆறுமுகம், பெரியசாமி, டிரைவர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Municipal Councilor ,AMC ,
× RELATED அய்யம்பேட்டையில் திமுக செயற்குழு கூட்டம்