×

பட்டா நிலம் ஆக்கிரமிப்பு ஆய்வுக்கு ெசன்ற தாசில்தாரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கடத்தூர், நவ.28: கடத்தூர் அருகே ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக எழுந்த புகாரின் ேபரில், ஆய்வுக்கு சென்ற தாசில்தாரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அருகே, புட்டிரெட்டிப்பட்டி இந்திரா காலனியில், ஆதி திராவிடர் நலத்துறை சார்பில், பட்டா வழங்கி, நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே நிலத்தில் பொது தேவைக்கான நிலமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த பொது இடத்தில், சிலர் ஆக்கிரமித்து வீடுகளை கட்டியுள்ளனர். இது குறித்து ஊர் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் இளஞ்செழியன், ேநற்று காலை இந்திரா காலனியில் ஆய்வு செய்ய ெசன்றார். அப்போது, பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டனர்.  அவர்கள் கூறுகையில், ‘இந்திரா காலனியில் கடந்த 37 ஆண்டுகளுக்கு முன், 5 ஏக்கர் நிலத்தை ஆதி திராவிடர் நலதிட்டம் மூலம், ஏழை ஆதி திராவிடர் மக்களுக்கு 95 பட்டா மற்றும் சிறுவர் பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தை சுமார் 30 பேர் ஆக்கிரமித்து, அப்போதைய கிராம நிர்வாக அலுவலரிடம், ₹40 ஆயிரம் வழங்கி பட்டா பெற்றுக்கொண்டனர். தற்போது சிலர் வீடுகளை கட்டி வருகின்றனர். எனவே, போலியான பட்டா வைத்துள்ளவர்களிடம் இருந்து ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு, முறைகேடாக பட்டா வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும்,’ என்றனர். அப்போது தாசில்தார் கூறுகையில், ‘இப்பகுதியில் ஒதுக்கப்பட்ட நிலத்திற்கு, ஆதி திராவிடர் நலத்துறை சார்பில், 1992ம் ஆண்டில் பட்டா வழங்கப்பட்டது. அதற்கு பின்னர் வருவாய்த்துறை சார்பில் எந்த பட்டாவும் வழங்கப்படவில்லை. இது குறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Tags : civilians ,Patta ,
× RELATED அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக்கில் சென்ற கல்லூரி ஊழியர் பலி