×

ஒட்டர்பாளையம் கிராமத்தில் கிணறு பயன்பாட்டிற்கு திறப்பு

தர்மபுரி, நவ.28: காரிமங்கலம் அருகே ஒட்டர்பாளையம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கிணற்றை, பொது மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்.தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள பூமாண்டஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட கோமதூர் காலனியில் ₹16.63 லட்சம் மதிப்பில் திறந்தவெளி கிணறு, ஒட்டர்பாளையம் கிராமத்தில் ₹18.25 லட்சம் மதிப்பில் திறந்தவெளி கிணறு, பாலக்கோடு வட்டம், ஜெர்தலாவ் ஊராட்சியில் ₹10.70 லட்சம் மதிப்பில் மயானத்திற்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி, பாலக்கோடு காவல் நிலையம் பின்புறம் ₹5.50 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடம் கட்டும் பணி ஆகியவற்றை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மலர்விழி தலைமை வகித்தார். விழாவில், பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ  கோவிந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ரஹமத்துல்லாகான், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஆர்த்தி, ஆர்டிஓ (பொ) தேன்மொழி, தனித்துணை ஆட்சியர் வெங்கட்ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Opening ceremony ,well ,village ,Otterpalayam ,
× RELATED ஒதப்பை கிராமத்தில் ஆக்கிரமிப்பை...