×

செம்பட்டி அருகே போதை டிரைவரால் கவிழ்ந்த லாரி

திண்டுக்கல், நவ. 28: செம்பட்டி அருகே மதுபோதையில் ஓட்டி வந்த டிரைவரால் லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் டிரைவர் படுகாயமடைந்தார். நிலக்கோட்டையை சேர்ந்தவர் முரளி (37). டிரைவர். நேற்று முன்தினம் இவர் மதுரையில் இருந்து பழைய இரும்பு கம்பியை ஏற்றி கொண்டு திருச்செங்கோடி நோக்கி லாரியை ஓட்டி வந்தார். அப்போது முரளி மதுபோதையில் லாரியை ஓட்டி வந்ததாக தெரிகிறது. செம்பட்டி- நிலக்கோட்டை ரோடு ஒட்டுப்பட்டி அருகே வந்த போது லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் முரளி படுகாயமடைந்தார். இதுகுறித்து செம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : drug driver ,Sembatti ,
× RELATED செம்பட்டி அருகே கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை: போலீசார் விசாரணை