×

மேலூரில் சிபிஎம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்


மேலூர், நவ. 27: மேலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.தமிழக அரசு பட்டா வழங்கும் அரசு ஆணையை பாரபட்சமின்றி அமுல்படுத்த வேண்டும். மேலூர் தாலுகாவில் பல ஆண்டுகளாக புறம்போக்கு இடத்தில் குடியிருந்து வரும் குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க வேண்டும். நீண்ட நாட்களாக குடியிருக்கும் பகுதிகளை வகை மாற்றம் செய்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மேலூர் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் தாலுகா செயலாளர் கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர் அடக்கிவீரணன் மற்றும் தாலுகா குழு உறுப்பினர்கள் ஜெயராமன், ராஜேஸ்வரன், மணி, மணவாளன், சுப்பிரமணியன், பாண்டிச்செல்வம் ஆகியோர் முன்னிலையில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் உமாமகேஸ்வரன், ஒன்றிய செயலாளர்கள் வேல்பாண்டி, தவமணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு திரண்ட 500க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். வட்டாட்சியர் கிருஷ்ணகுமாரிடம் மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.பேரையூர் தாலுகா அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், முத்துராணி ஆகியோர் தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. தாசில்தார் செந்தில்குமாரிடம் மனு கொடுக்கப்பட்டது.உசிலம்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செல்லக்கண்ணு, முருகன் தலைமையில் ஆர்.டி.ஓ. சவுந்தர்யாவிடம் மனு கொடுக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு தாலுகா செயலாளர் ராஜு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளங்கோவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

Tags : CPM ,Melur ,
× RELATED ஆக்சிலேட்டருக்கு பதிலாக பிரேக்கை...