×

மாவட்டம் முழுவதும் அரசு பள்ளியில் இலவச ேலப்டாப் வழங்கும் விழா

கடத்தூர், நவ.27: தர்மபுரி மாவட்டம் முழுவதும் அரசுபள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழா நடந்தது. கடத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 2018-19ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழா நேற்று நடந்தது. அரூர் தாசில்தார் பிரதாப் தலைமை வகித்தார். அரூர் கல்வி மாவட்ட அலுவலர் பொன்முடி வரவேற்றார். பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி, 70மாணவ, மாணவியர்களுக்கு இலவச லேப்டாப்களை வழங்கி பேசினார். இந்நிகழ்ச்சியில் தாசில்தார் இளஞ்செழியன், கூட்டுறவு வங்கி தலைவர்கள் மதிவாணன், டாக்டர் பன்னீர்செல்வம், ராமு, சந்தோஷ்குமார், ரவீந்திரன், சுழல் கண்ணன், தீப்பொறி மாதையன், மாது மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். தலைமையாசிரியை ரமாதேவி நன்றி கூறினார்.

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் இலவச லேப்டாப் வழங்கும் விழா நடந்தது. அரூர் ஆர்டிஓ பிரதாப் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் கற்பகம் வரவேற்றார். இதில், மெணசி, பையர்நத்தம், துறிஞ்சப்பட்டி, பொ.மல்லாபுரம் பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, முக்காரெட்டிப்பட்டி பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலை பள்ளி, அதிகாரப்பட்டி பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் 922 பேருக்கு இலவச லேப்டாப்களை, பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி வழங்கினார். இதில், அரூர் கல்வி மாவட்ட அலுவலர் பொன்முடி, பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் இளஞ்செழியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் அப்துல் அஜிஸ் நன்றி கூறினார்.

ெபன்னாகரம்: பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் (பொ) தமிழ்வேல் தலைமை வகித்தார். தமிழாசிரியர் முனியப்பன் வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர்கள் லட்சுமணன், லில்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தர்மபுரி பால்வள தலைவர் அன்பழகன் கலந்து கொண்டு, 2018-2019ம் கல்வி ஆண்டில் பிளஸ்2 படித்த 220 மாணவர்களுக்கு லேப்டாப்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் பேரூராட்சி தலைவர் சுப்பிரமணியன் முன்னாள் கூட்டுறவு சங்க துணை தலைவர் விஜய பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.தொழிற்கல்வி ஆசிரியர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.

Tags : Laptop Lounge Ceremony ,Government School ,
× RELATED புதுக்கோட்டை அரசு பள்ளியில் வானியல் திருவிழா