×

கடத்தூர் அருகே பாலத்தில் மின் விளக்கு வசதி

கடத்தூர், நவ.27: கடத்தூர் அருகே ஆத்தூர் பகுதியில் உள்ள பாலத்தில் மின் விளக்கு வசதி ஏற்படுத்த ேவண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடத்தூர் அருகே ஆத்தூர் பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் நபார்டு மற்றும் கிராம சாலை இணைப்பு திட்டத்தின் கீழ், ₹2.20 கோடி மதிப்பில், கடந்த ஓராண்டிற்கு முன், புதிதாக பாலம் கட்டப்பட்டது.இந்த பாலத்தை தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பாலத்தில் மின் விளக்கு வசதி ஏற்படுத்தாததால், இரவு ேநரங்களில் இந்த பாலம் வழியாக வரும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு, பலத்தில், மின் விளக்கு வசதி ஏற்படுத்த, மின் வாரிய அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bridge ,Kadathur ,
× RELATED பாம்பன் சாலை பாலத்தில் இணைப்பு ஸ்பிரிங் பிளேட்கள் சேதம்