×

மகாராஜகடை வனப்பகுதியில் 10,000 விதைப்பந்துகளை வீசிய பள்ளி மாணவர்கள்

கிருஷ்ணகிரி, நவ.27: மகாராஜகடை வனப்பகுதியில், 10 ஆயிரம் விதைப்பந்துகள் பள்ளி மாணவ, மாணவிகள் வீசினர். மகாராஜகடை  அரசு உயர்நிலைப்பள்ளி தேசிய பசுமைப்படை மற்றும் கிராமப்புற சமூக நலவாழ்வு  அறக்கட்டளை சார்பில், மகாராஜகடை வனப்பகுதியில் விதைப்பந்து தூவும் நிகழ்ச்சி  நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனர் ராஜேஷ் தலைமை வகித்தார்.  சிறப்பு விருந்தினராக வனச்சரக அலுவலர் சக்திவேல் பங்கேற்று, விதைப்பந்து  தூவும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவ, மாணவிகள்  பங்கேற்று, வாகை, யானை குண்டுமணி, குமிழ், கருவேள் ஓடை, சீயக்காய், வேம்பு,  புளியம், அரசம், ஆலமரம், உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  விதைப்பந்துகளை வீசியெறிந்தனர். இதில் தேசிய பசுமைப்படை  மாணவர்கள், அறக்கட்டளை நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : School students ,forest ,Maharajagada ,
× RELATED அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் 132 பேர் தேர்ச்சி