×

புதுவை அருகே அசத்தல் பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்யும் தேசிய நல்லாசிரியர்

திருக்கனூர், நவ. 27:  மாதம் ஒரு முறை பள்ளியில் குழந்தைகள் கழிவறையை பல ஆண்டுகளாக தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார் புதுச்சேரியை சேர்ந்த தேசிய நல்லாசிரியர்.புதுச்சேரி அடுத்த கூனிச்சம்பட்டு கிராமத்தில் உள்ளது பாவேந்தர் பாரதிதாசன் அரசு தொடக்கப்பள்ளி. பாவேந்தர் பாரதிதாசன் ஆரம்ப காலத்தில் இப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை 490 மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். 16 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இப்பள்ளிக்கு பொறுப்பு தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சசிகுமார். தேசிய நல்லாசிரியர் விருதை நடப்பாண்டு பெற்றவர். 2 ஆண்டுகளுக்கு முன் சிறந்த பள்ளிக்கான விருது இப்பள்ளிக்கு வழங்கப்பட்டது.  இப்பள்ளியின் கழிவறை நட்சத்திர விடுதியில் உள்ளதைபோல் தூய்மையாக இருக்கும். நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் குடிநீர், தூய்மை, சுகாதாரம் ஆகியவற்றை மையமாக வைத்து `தூய்மைப் பள்ளி’ என்ற விருதை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை வழங்குகிறது.

கடந்தாண்டு 100 சதவீதம் புள்ளி பெற்று முதலிடம் பிடித்து இப்பள்ளியானது தூய்மை பள்ளிக்கான தேசிய விருதை பெற்றது. இதற்கு முக்கிய காரணம் தூய்மையான கழிவறை. இங்குள்ள கழிவறை தூய்மையை இக்குழந்தைகள் உறுதி செய்வார்கள். தொடர்ந்து பணியாளர்கள் பராமரித்தாலும் மாதம் ஒரு முறை இக்கழிவறையை தூய்மை செய்து பராமரித்து வருகிறார் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற சசிக்குமார்.  மாதத்துக்கு ஒரு முறை பள்ளியில் உள்ள குழந்தைகள் கழிவறையை முற்றிலும் தூய்மை செய்கிறார். இதனால் கழிவறை தூய்மையாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் ஏற்படுகிறது.

Tags : teacher ,Asathal ,Puthuvai ,school ,
× RELATED தமிழக அரசு பள்ளிகளில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர்: ராமதாஸ் வலியுறுத்தல்