×

செங்கம் அருகே அரசின் அலட்சியத்தால் மலைவாழ் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பரிதாபம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

செங்கம், நவ.27: செங்கம் அருகே அரசின் அலட்சியத்தால் மலைவாழ் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பரிதாப நிலை தள்ளப்பட்டுள்ளனர். அதனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.செங்கம் அடுத்த ஜவ்வாதுமலை அடிவார கிராமங்களான பன்ரேவ், ஊர் கவுண்டனூர், துரிஞ்சிகுப்பம், கல்லாத்தூர், கல்பிளந்தானூர் போன்ற மலை அடிவார கிராமங்களில் மலை சாதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.இந்நிலையில், மலைவாழ் மக்கள் முற்றிலும் விவசாயம் சார்ந்து எழுத்தறிவு, படிப்பறிவு என்று எந்த விழிப்புணர்வு இன்றி வாழ்ந்து வருகின்றனர். மேலும், தங்களின் பிள்ளைகளுக்கு அரசின் சலுகைகளான உயர் கல்வி, அரசு பணிகள், வங்கியில் கடனுதவி, சாதி சான்று போன்ற அரசு திட்டங்கள் பெறமுடியாமல் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.தொடர்ந்து, போதிய மழை இல்லாத நேரங்களில் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு குடும்பத்துடன் சென்று கூலி வேலை செய்கின்றனர். கடந்த 2002ம் ஆண்டு கிளையூர், கல்லாத்தூர், துரிஞ்சிகுப்பம் உட்பட பல பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்கள் ஆயிர கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் குறைந்த விலைக்கு குப்பநத்தம் அணைக்கு கையகபடுத்தப்பட்டு பல தவணைகளாக அவர்களுக்கு வழங்கப்பட்டது.

அப்போது, விவசாயநிலம், வீடு வழங்கியவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை. வீடு கட்டி அவர்கள் பெயரில் பட்டா கொடுக்கப்படும் என்று 120 பேருக்கு அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர். ஆனால், அதிகாரிகள் கூறி பல ஆண்டுகள் அவர்களின் உத்தரவு காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.இதையடுத்து, கடந்த 2010ம் ஆண்டு குப்பநத்தம் அணை திறக்கப்பட்டு தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்து வரும் நிலையில் மலைவாழ் மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாமல் அதிமுக அமைச்சர் ஒருவரின் தலையீடு காரணமாக அவரின் ஆதரவு உள்ளவருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.இதனால், மலைவாழ் மக்களின் விளை நிலங்கள், வீடுகள் இழந்து வாழ்ந்து வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எந்த திட்டங்களும், அரசு சார்பில் சென்றடைவதில்லை என்று மலைவாழ் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், அரசு சார்பில் வழங்கும் சலுகைகளும் வழங்காமல் அரசு அலை கழித்துவருவது மலைவாழ் மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மலைவாழ் மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : state ,Sengam ,
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி