×

முழு அடைப்பு போராட்டம் வாபஸ்

புதுச்சேரி,  நவ. 26: புதுச்சேரியில்   அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும். பண்டிகை கால   உதவித்தொகை ரூ. 2 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி நாளை (27ம் தேதி) அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டு   போராட்டக்குழு சார்பில் மாநில அளவிலான பந்த் போராட்டம் அறிவிக்கப்பட்டது. புதுச்சேரியில்   முடி திருத்துவோர், துணி துவைப்பவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், பஸ்   ஓட்டுனர்கள், தலையில் சுமந்து காய்கறி விற்பவர்கள், சாலையோர வியாபாரிகள்,   ஆட்டோ, டெம்போ, டாக்சி டிரைவர்கள் என ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் வேலை   செய்து வருகின்றனர். 27 வகையான தொழிலாளர்களுக்கு ஏனைய   தொழிலாளர்களுக்கு உள்ளது போன்று வேலைநேரம், இஎஸ்ஐ, பிஎப், சம்பளம் என ஏதும்   இல்லை. பணி பாதுகாப்பற்ற சூழலில் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.   அமைப்பு சாரா தொழிலாளர்களை கொண்ட நல வாரியம் அமைத்திட தொடர்ந்து   தொழிலாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.  கடந்த செப்டம்பர் மாதம் இது தொடர்பாக   வேலைநிறுத்தம் செய்ய அறிவிக்கப்பட்டது. 20 நாட்களுக்குள் நலவாரியம்   அமைக்கப்படும். ஆயிரம் ரூபாய்க்கு கூப்பன் வழங்கப்படும் என அமைச்சர் உறுதி   அளித்தும் நடவடிக்கை இல்லை.

இதனை கண்டித்து நாளை காலை 6 மணி  முதல் மாலை 6  மணி வரை பொது வேலைநிறுத்தமும், பேரணியும் நடைபெறும் என  தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து  அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு  போராட்டக் குழு ஏஐடியுசி, சிஐடியு,  அதிமுக உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்களை  அழைத்து அமைச்சர்கள் கந்தசாமி,  ஷாஜகான் ஆகியோர் புதுச்சேரி சட்டசபை  கமிட்டி அறையில் பேச்சுவார்த்தை  நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில்  உடன்பாடு எட்டப்பட்டது.
இதையடுத்து  அமைச்சர் கந்தசாமி நிருபர்களிடம்  கூறுகையில், அமைப்பு சாரா  தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைத்திட அரசு  ஏற்கனவே அறிவித்துள்ளது.  பல்வேறு காரணங்களால் காலதாமதம் ஆகி வருகிறது.  இதனால் தொழிலாளர்கள்  போராட்டம் அறிவித்தனர். வரும் ஜனவரி மாதம் 10ம்  தேதிக்குள் உறுதியாக  அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம்  அமைக்கப்படும். வரும்  புதன்கிழமைக்குள் (27ம் தேதி) ஆயிரம் ரூபாய்க்கான  தீபாவளி கூப்பன்  வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதனை ஏற்று  தொழிலாளர்கள்  போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர் என்றார். இந்நிலையில் ஜனவரி  மாதம்  நலவாரியம் அமைக்கப்படாவிட்டால் அனைத்து தொழிற்சங்கங்களுடன் மீண்டும்   கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர்கள்  

Tags : shutdown fight ,
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...