×

முள்ளுவாடி ஏரியில் கழிவுநீர் தேக்கத்தால் நோய் பரவும் அபாயம்

பென்னாகரம், நவ.26: பென்னாகரம் அருகே முள்ளுவாடி ஏரியில் கழிவுநீர் தேக்கத்தால், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு தொற்று ேநாய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பென்னாகரம் பேரூராட்சியில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான முள்ளுவாடி ஏரி 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சுற்றுவட்ட பகுதிகளில் சேகரமாகும் கழிவுநீர் அனைத்தும் இந்த ஏரியில் விடப்படுகிறது. இதனால் ஏரியில் உள்ள தண்ணீர் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், ஏரியில் தேங்கியுள்ள தண்ணீரால், எட்டியாம்பட்டி, கோடியூர் உள்ளிட்ட ஏரிகளின் தண்ணீரும் மாசடைந்து வருகிறது. அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு, குடிநீர் பச்சை நிறத்தில் மாறியுள்ளது. இதனால் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முள்ளுவாடி ஏரியை தூர்வார கோரி, அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘ஏரியில் தேங்கியுள்ள கழிவுநீரால் நிலத்தடி நீர் பச்சை நிறமாக மாறியுள்ளது. இதனால் குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறது. மேலும், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 20 கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, முறையான சாக்கடை வசதி ஏற்படுத்தி, ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும்,’ என்றனர்.

Tags : Mulluvadi Lake ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா