×

நாங்குநேரி அருகே நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நாங்குநேரி,நவ.26: நாங்குநேரி அருகேயுள்ள பட்டர்புரத்தை சேர்ந்த வேம்பு மகன் ஆழ்வார் (24). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. ஆழ்வார் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள ஓடை ஒன்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது நண்பர்களுக்கு இடையே ஓடையில் உள்ள பாலத்தின் கீழ் நீந்தி சென்று வெளியே வரவேண்டும் என்று போட்டி வைத்துள்ளனர். அதன்படி பாலத்தின் அடியில் ஆழ்வார் நீந்தி சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் ஆழ்வார் பாலத்திற்கு வெளியே வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் பாலத்தின் அடியில் மூழ்கி சென்று பார்த்தபோது அங்கிருந்த இரண்டு பாறைக்கு இடையில் மாட்டி கொண்டிருப்பதைக் கண்டனர். உடனே ஆழ்வாரை மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், ஆழ்வார் ஏற்கனவே மூச்சு திணறி இறந்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த நாங்குநேரி போலீசார் ஆழ்வார் உடலை கைப்பற்றி வழக்குபதிவு செய்து விசாரளை நடத்தி வருகின்றனர்.



Tags : Nankuneri ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை