×

காரிமங்கலத்தில் ஆழ்துளை கிணற்றில் கழிவுநீர் கலப்பு

காரிமங்கலம், நவ.22: காரிமங்கலம் மகபூப் நகரில் ஆழ்துளை கிணற்றில் கழிவுநீர் கலந்து வருவதால் தொற்று ேநாய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காரிமங்கலம் பேரூராட்சி, 7வது வார்டு மகபூப் நகரில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஆழ்துளை கிணறு மூலம், குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆழ்துளை கிணறு தரை மட்டத்தில் அமைக்கப்பட்டு, அதன் மேல் இரும்பு தகடுகள் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த இரும்பு தகட்டில் உடைப்பு ஏற்பட்டு, அதன் மூலம் அருகில் உள்ள சாக்கடை கழிவுநீர் புகுந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு தொற்று ேநாய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ேபரூராட்சி அதிகாரிகளிடம் புகார் கூறியும், நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர்.
எனவே, ஆழ்துளை கிணற்றில் சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுக்க, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க ேவண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : well ,
× RELATED நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் மூலம்...