×

மாவட்ட மைய நூலகத்தில் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி

தர்மபுரி, நவ.22: தர்மபுரி மாவட்ட மைய நூலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வரும் 24ம் தேதி முதல் தொடங்குகிறது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட நூலக அலுவலர் (பொ) சேகர் வெளியிட்டுள்ள அறிக்கை:    தர்மபுரி மாவட்ட மைய நூலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு நேர வகுப்புகள், வரும் 24ம்தேதி முதல் தொடர்ந்து நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பு மையத்தில், போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளும் இளைஞர்கள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் தேர்வில் குரூப்-2 தேர்வுக்கும் பயிற்சி பெறலாம். மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம் மற்றும் தென்காசி ஆகாஷ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து இந்த பயிற்சி அளிக்க உள்ளது. நூலகத்திற்கு வரும் வாசகர்கள், உறுப்பினர்கள், கல்லூரி, மாணவ, மாணவிகள் மற்றும் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், இப்பயிற்சி மையத்தில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தங்களது பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : selection ,District Center Library ,
× RELATED பேராசிரியர் பாலசுப்ரமணியன் மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்