×

வெளிநாட்டில் வேலை ேதடும் இளைஞர்கள் போலி இடைத்தரகர்களிடம் ஏமாற வேண்டாம்

ஊட்டி,  நவ.22: வெளிநாட்டில் வேலை ேதடும் இளைஞர்கள், போலி இடைத்தரகர்கள் மற்றும்  பயண முகவர்களிடம் சிக்கி ஏமாற வேண்டாம் என காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.   நீலகிரி மாவட்ட எஸ்.பி. சசிமோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது, வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்வோரின் எண்ணிக்கை  நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை பயன்படுத்தி பல போலி  இடைத்தரகர்கள், பயண முகவர்கள் வேலை தேடுவோரின் அறியாமையை பயன்படுத்திக்  கொள்கின்றனர்.  அவர்கள், வேலை அளிக்கும் நிறுவனங்களின் விவரங்களை  சம்பந்தப்பட்டவர்களுக்கு போலியான சான்றிழ் வழங்குகின்றனர். மேலும், வேலை  தேடுவோர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு சுற்றுலா விசா மூலம் வெளி  நாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

 அங்கு வேலைக்கு என செல்லும்  இளைஞர்கள் ஏமாற்றப்படுவதுடன், தவிப்பிற்கு ஆளாகின்றனர். இது போன்று  ஏமாற்றுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வெளிநாடுகளில் வேலைக்கு  அனுப்ப இருக்கும் பயண நிறுவனங்கள் (டிராவல் ஏஜென்சிஸ்) தங்களுடைய  வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில் வேலை ஆட்களை தேர்வு செய்யும் முகவராக  பதிவு செய்திருத்தல் வேண்டும்.அவ்வாறு பதிவு செய்திருக்கும் நிறுவனம்,  வேலை ஆட்களை தேர்வு செய்யும் முகவர்கள் பட்டியல் ஒன்று வெளியுறவுத்துறை  அமைச்சக இணையதள முகவரியில் www.immigiration.gov.inல்  வெளியிடப்பட்டிருக்கும். எப்போதெல்லாம் மின்னஞ்சல், குறுஞ்செய்தி, வாட்ஸ்  அப் மற்றும் இதர உள்ளீடுகள் சம்பந்தப்பட்ட பொதுமக்கள் பெறும்போது, அதனை  முதலில் சம்பந்தப்பட்ட முகவர், வெளியிடுபவர் உண்மையாக பதிவு செய்த வேலை  வாய்ப்பு தேர்வு முகவரா? என்பதை இணையதள முகவரியில் சரிபார்த்துக் கொள்ள  வேண்டும்.  பின், சம்பந்தப்பட்ட முகர்களிடம் தொடர்பு கொள்ள வேண்டும்.

 ஏதேனும் சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தை அணுகலாம் அல்லது  காவல் துறைக்கு 8608000100 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தெரியப்படுத்தலாம்.  
மேலும், பொதுமக்கள் சம்பந்தப்பட்ட விளம்பரத்தை தெளிவுப்படுத்தி கொள்வதுடன்  அந்த நிறுவனம் உண்மையான நிறுவனமா? என உறுதி செய்த பின், பணி நியமன ஆணை  பெற்று பின் வெளி நாடுகளுக்கு பயணம் செல்லவும். அரசு பதிவு பெறாத  நிறுவனங்களிடம் ஏமாறாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு  நீலகிரி எஸ்.பி. சசிமோகன் கூறியுள்ளார்.

Tags : brokers ,
× RELATED வாட்ஸ்அப் குழு அமைத்து பாலியல் தொழில்...