×

கோத்தகிரி பழங்குடியின கிராமத்தில் குட்டிகளுடன் முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் கிராம மக்கள் அச்சம்

கூடலூர், ஏப்.23: கூடலூர் அருகே மின்சாரம் தாக்கி மர அணில் பலியானது. கூடலூர் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான மரங்களை காண முடிகிறது. இங்குள்ள காப்பி தோட்டங்கள் மற்றும் உயரமான மரங்களில் மர அணில்கள் தாவித்திரியும். ஒரு கால கட்டத்தில் மிகவும் குறைவாக காணப்பட்ட மர அணில்கள் தற்போது பரவலாக அதிக அளவில் காணப்படுகிறது. இவை அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளில் சிக்கி இறப்பதும் நடைபெற்று வருகிறது.

இதேபோல், கூடலூர் கள்ளிக்கோட்டை சாலையில் தனியார் திருமண மண்டப பகுதியில் சாலை ஓரத்தில் மர அணில் ஒன்று இறந்து கிடப்பது குறித்து வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மர அணிலை மீட்டு சென்று உடற்கூராய்வு செய்தனர். அதில் மர அணில் மின்சாரம் தாக்கி இறந்திருப்பது தெரிய வந்துள்ளது. மரத்தின் கிளைகளில் இருந்து தாவும் போது மின் கம்பியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து இறந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post கோத்தகிரி பழங்குடியின கிராமத்தில் குட்டிகளுடன் முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் கிராம மக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Kotagiri ,Kudalur ,Dinakaran ,
× RELATED கோத்தகிரி தீனட்டி பகுதியில் கேரட்...