×

வாட்ஸ்அப் குழு அமைத்து பாலியல் தொழில் நடத்திய புரோக்கர்கள் 2 பேர் கைது: ஐந்து பெண்கள் மீட்பு

சென்னை: சென்னையில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வரும் புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் செந்தில்குமாரிக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் வனிதா மேற்பார்வையில், விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜலட்சுமி மற்றும் இன்ஸ்பெக்டர் செல்வராணி தலைமையிலான போலீசார், பாலியல் தொழில் செய்யும் புரோக்கர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், அடையாறு இந்திரா நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில், சந்தேகத்திற்கு இடமான வகையில் வாலிபர்கள் பலர் வந்து செல்வதாக, விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜேஸ்வரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், விபசார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வராணி தலைமையிலான மகளிர் போலீசார், சம்பந்தப்பட்ட வீட்டின் அருகே நேற்று முன்தினம் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, வாலிபர்கள் சிலர் அந்த வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது. உடனே போலீசார் அதிரடியாக அந்த வீட்டிற்குள் நுழைந்து, ஆய்வு செய்தனர்.

அப்போது, காட்டுப்பாக்கம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பாலியல் புரோக்கர் மாதவன் ராஜ் (எ) சிவன் (28), மயிலாப்பூர் கோயில் தோட்டம் பகுதியை சேர்ந்த வரதன் (எ) வரதராஜ் (53) ஆகியோர் வாட்ஸ்அப் குழு அமைத்து, அந்த வீட்டில் பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய வடமாநில பெண் உட்பட 5 இளம்பெண்கள் மீட்கப்பட்டு, காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

The post வாட்ஸ்அப் குழு அமைத்து பாலியல் தொழில் நடத்திய புரோக்கர்கள் 2 பேர் கைது: ஐந்து பெண்கள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : WhatsApp ,Chennai ,Police Commissioner ,Sandeep ,
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...