×

சூளகிரி அருகே சாலை வசதி கேட்டு கிராம மக்கள் மனு

கிருஷ்ணகிரி, நவ.20: சூளகிரி தாலுகா பஸ்தலப்பள்ளி ஊராட்சியை சேர்ந்த முடிப்பிநாயக்கனப்பாளையம் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: முடிப்பிநாயக்கனப்பாளையம் கிராமத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 500க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறோம். இங்கிருந்து 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காளிங்காவரம், பஸ்தலப்பள்ளி மற்றும் சூளகிரியில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். இங்குள்ள விவசாயிகள் விளை பொருட்கள் விற்பனைக்காக சூளகிரி சந்தைக்கு எடுத்து செல்கின்றனர். இந்நிலையில், எங்கள் கிராமத்திற்கு போதிய சாலை வசதி இல்லாததால், கடந்த 50 ஆண்டுகளாக அவதியடைந்து வருகிறோம். பஸ்தலப்பள்ளி கிராமத்தில் இருந்து திம்மராயசுவாமி கோயில் வரை தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து எங்கள் கிராமத்திற்கு 2 கி.மீ தூரம் மண் சாலை உள்ளது. இந்த மண் சாலை வழியாக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் சிரமத்துடன் செல்வதால் நோயாளிகள் அவதியுற்று வருகின்றனர். எனவே, மண்சாலையை தார் சாலையாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Sulagiri ,
× RELATED சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில்...