இந்திராகாந்தி பிறந்த நாள் விழா

திருப்பூர், நவ. 20:  தமிழ்நாடு அன்னை இந்திரா காங்கிரஸ் பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்த நாளையொட்டி அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருப்பூர் பி.என். ரோடு அன்னை இந்திரா படிப்பகத்தில் ‘தமிழ்நாடு அன்னை இந்திரா காங்கிரஸ் பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.விழாவுக்கு சங்கத்தின் மாநில தலைவர் துரைச்சாமி தலைமை வகித்து இந்திராகாந்தியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில பொதுச்செயலாளர் முத்துக்குமார், துணைத்தலைவர் காளிமுத்து, மகளிர் அணி தலைவி பஞ்சவர்ணம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முகமதுபாரூக் வரவேற்றார். துணைச்செயலாளர் முரளி, பல்லடம் ஒன்றிய செயலாளர் மாதேஷ் உட்பட பல்வேறு கிளைப்பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.  மாநில செயற்குழு உறுப்பினர் கந்தன் நன்றி கூறினார். தமிழ்நாடு தேசிய பனியன் ஜின்னிங், பொது தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் பார்க் ரோடு அன்னை இந்திரா நினைவு இல்லத்தில் நடந்த பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு காரத்தி தலைமை வகித்தார். சங்க கொடியை மாவட்ட தலைவர் பெருமாள் ஏற்றி வைத்து இந்திராகாந்தியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துணைத்தலைவர் ராஜேந்திரன், செயலாளர் முத்து இஸ்மாயில் உட்பட பலர் கலந்துகொண்டனர். திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இந்திராகாந்தியின் படத்திற்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி மரியாதை செலுத்தினர்.

Related Stories:

>