கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்றவர் கைது

ஈரோடு, நவ. 19:  ஈரோடு வைராபாளையம் அரசமர விநாயகர் கோயில் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (47). வியாபாரி. இவர் நேற்று ஈரோடு திருநகர் காலனி ஜெயகோபால் வீதி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு நின்றிருந்த மர்மநபர் ஒருவர், முருகேசனை வழிமறித்து தான் பெரிய ரவுடி என கூறி மது குடிக்க பணம் கேட்டு மிரட்டியுள்ளார். முருகேசன் பணம் இல்லை என மறுக்க, உடனே அந்த மர்மநபர் பாக்கெட்டில் வைத்திருந்த கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பயந்து போய் முருகேசன் கூச்சல்போட்டார்.

அக்கம்பக்கத்தினர் வருவதை பார்த்து அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் முருகேசன் அளித்த புகாரின் பேரில், கத்தியை காட்டி மிரட்டிய கருங்கல்பாளைய்ம கே.என்.கே ரோடு பகுதியை சேர்ந்த மேக்கப் தீனா என்ற தினகரன் (23) என்பவரை போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED குட்கா பதுக்கிய முதியவர் கைது