×
Saravana Stores

தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடியில் பயிர் காப்பீடு திட்ட விழிப்புணர்வு துண்டு பிரசுரம்: வேளாண்மை உதவி இயக்குனர் வழங்கினார்

தண்டராம்பட்டு, நவ.14:  தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடியில் நேற்று விவசாயிகளுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்ட விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் இணைய நாளை கடைசி நாளாகும். எனவே, தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி ஊராட்சியில் நேற்று, வேளாண்மை உதவி இயக்குனர் ராம் பிரபு மற்றும் வேளாண்மை துறையினர் பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் இணைவது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.

பின்னர் வேளாண்மை உதவி இயக்குனர் கூறுகையில், `2ம் பருவ சம்பா நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் 2019-20 ஆண்டிற்கான பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர ஏக்கருக்கு ₹416 பிரீமியம் செலுத்த வேண்டும். வறட்சி, வெள்ளம் போன்ற இடர்பாடுகள் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு பெற முடியும். எனவே, ஆதார் அட்டை நகல், சிட்டா, அடங்கல், வங்கி புத்தகம் நகல் உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்து பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்’என்றார்.அப்போது, வேளாண்மை அலுவலர் நிவேதா, துணை வேளாண்மை அலுவலர் சேகரன் மற்றும் உதவி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Assistant Director of Agriculture ,Thandarampattu Next Thani Pada ,
× RELATED நடப்பு சம்பா பருவத்திற்கு விவசாயிகள்...