×

கோட்டார்  நாராயணகுரு பள்ளி மாணவர்கள் சாதனை

நாகர்கோவில், நவ. 12: வில்லுக்குறி மனவளக்கலை மற்றும் அறக்கட்டளை ஆன்மீக கல்விமையம் சார்பில் 2வது மாவட்ட அளவிலான யோகாசன போட்டி மாடத்தட்டுவிளை லாரன்ஸ் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் 29 பள்ளிகளை சேர்ந்த 339 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.  கோட்டார் ஸ்ரீ நாராயணகுரு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 19 பேர் கலந்துகொண்டனர். இந்த 19 மாணவர்களும் போட்டிகளில் வெற்றிபெற்றனர். சிறப்புப் பிரிவில் 6ம் வகுப்பு மாணவன் வருண், 7ம் வகுப்பு மாணவர்கள் கோகுல் மணி, சிவா, அபினேஷ் ஆகியோர் முதல்பரிசு பெற்றனர். 5ம் வகுப்பு மாணவர் கதிரவன் 2ம் பரிசு பெற்றார். மேலும் பொதுப்பிரிவில் 2ம் வகுப்பு மாணவன் வினய் லக்ஷ்மண், 3ம் வகுப்பு மாணவன் நகுல் மணி, 6ம் வகுப்பு மாணவர்கள் மணிகண்டன், நீலேஷ், 7ம் வகுப்பு மாணவர்கள் அஜய் தேவா, ரிஷி, ஐயப்பன், ஆதிஸ்ராம், தர்ஷன் முதல் பரிசும், 3ம் வகுப்பு மாணவர்கள் ஸ்ரீராம் பிரசாத், தருண் இரண்டாம் பரிசும், 7ம் வகுப்பு மாணவர்கள் ரிஷி சூர்யா, மணிகண்டன், கௌசிக்ரெத்தினம் 2ம் பரிசும் பெற்றனர். யோகாசன போட்டிக்கான விருது ஸ்ரீ நாராயணகுரு பள்ளிக்கு கிடைத்தது. மாணவர்களுக்கு பயிற்சி அளித்த யோகா ஆசிரியை சுதா மற்றும் வெற்றிபெற்ற மாணவர்களை பள்ளியின் தலைவரும், தாளாளருமான நாகராஜன், துணை தலைவர் கோபாலன், பள்ளி முதல்வர் அமுதா ஜெயந்த், துணை முதல்வர் அவ்வை மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டினர்.

Tags : Kotar  Narayanaguru School Students Adventure ,
× RELATED அருமனை அருகே பழுதான மின்கம்பத்தால் பொதுமக்கள் அச்சம்