×

நில உச்சவரம்பு சீர்திருத்தத் திட்டத்தின் கீழ் நிலம் பெற்ற பயனாளிகளுக்கு சுவாதீனம் வழங்க கோரி சப்-கலெக்டர் அலுவலகம் முற்றுகை


தாராபுரம், நவ. 7: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த தளவாய்பட்டினம், ஊத்துப்பாளையம், சித்த ராவுத்தன்பாளையம், எரகம்பட்டி, உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராமங்களில் நில உச்சவரம்பு சீர்திருத்த திட்டத்தின் கீழ் நிலச்சுவான்தார்கள் இடமிருந்து அரசு தரப்பில் உபரி நிலங்களை பெற்று நிலமற்ற ஏழை நடுத்தர விவசாயிகளுக்கு, பிரித்து ‘எப்’ பட்டா வழங்கப்பட்டது. கடந்த 2003 மற்றும் 2006ம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட இந்த நிலங்களின் பயனாளிகளுக்கு நிலத்தை ஒப்படை செய்த தமிழக அரசு குறிப்பிட்ட அந்த நிலங்களை நில அளவீடு செய்து பயனாளிகளுக்கு  இதுவரை சுவாதீனம் வழங்கவில்லை.எனவே நில உரிமையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட அந்த நிலங்களை அளவீடு செய்து  சுவாதீனம் வழங்க வலியுறுத்தி தாராபுரம் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ரகுபதி தலைமையில் கைக்குழந்தைகளுடன் 50 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் தாராபுரம் சப்-கலெக்டர்  அலுவலகத்தை முற்றுகையிட்டு சப்-கலெக்டர் பவன்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். 100க்கும் மேற்பட்டோர் சப்-கலெக்டர் அலுவலகதை முற்றுகையிட்டால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதில் தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் முருகன், லட்சுமணன், கருப்பசாமி, மலையாண்டி, இசக்கி ராஜ், ரவி, பாலு, ரஞ்சித் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : office blockade ,
× RELATED மருத்துவ சேர்க்கை இடஒதுக்கீட்டில்...