சந்தையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு 20 கிலோ பிளாஸ்டிக் பை பறிமுதல்

திருபுவனை, நவ. 6: மதகடிப்பட்டு சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், 20 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். திருபுவனை அடுத்த மதகடிப்பட்டில் செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இதையொட்டி அங்கு அதிகளவில் காய்கறி கடைகள், பழக்கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெறும். இந்த சந்தையில் தடை ெசய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்கு புகார்கள் சென்றது.

இதையடுத்து நேற்று காலை கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார், உதவி பொறியாளர் நாகராஜ், அலுவலக உதவியாளர் அன்பு மற்றும் ஊழியர்கள் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வியாபாரிகளிடம் இருந்து சுமார் 20 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இனிமேல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படுவதுடன், வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

Related Stories:

>