×

பணி நிரந்தரம் கோரி மறியலுக்கு முயற்சி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் 84 பேர் கைது

திண்டுக்கல், நவ. 6: பணி நிரந்தரம் கோரி திண்டுக்கல் மின்வாரிய அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்ற ஒப்பந்த ஊழியர்கள் 84 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த 12 ஆண்டுகளாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் இருந்தும் அவை நிரப்பப்படவில்லை. தமிழகத்தில் ஏற்பட்ட பேரிடரான எக்கி, வர்தா, தானே, கஜா புயல்களின் போதும் மற்றும் மழை வெள்ளம் போன்ற காலங்களிலும் தமிழக அரசும், மின்வாரியமும் பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்து எங்களிடம் பணியை மட்டும் வாங்கி கொண்டு ஏமாற்றி விட்டனர்.

இதை கண்டித்தும், அனுபவமில்லாத 5 ஆயிரம் கேங்க்மேன் பணிக்காக அனுபவமிக்க 12 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களை புறம்தள்ள கூடாது. மின்துறை அமைச்சர் அறிவித்த தினக்கூலி ரூ.380 கிடைக்க வழி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டி மின்வாரிய அலுவலகம் முன்புள்ள சாலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் நேற்று மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது போலீசார் தடுத்து நிறுத்தி 84 பேரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : contract workers ,
× RELATED திருப்பதி மாநகராட்சியில் போலி...