×

திருப்பதி மாநகராட்சியில் போலி வாக்காளர்களை சேர்த்த 3 ஒப்பந்த பணியாளர்கள் டிஸ்மிஸ்

திருமலை: திருப்பதி மாநகராட்சியில் போலி வாக்காளர்களை சேர்த்த 3 ஒப்பந்த பணியாளர்களை தாசில்தார் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளார். ஆந்திர மாநிலம் திருப்பதி மாநகராட்சியில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக மாநகராட்சி ஆணையருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்நிலையில் மேற்கு காவல் நிலையத்தில் ஆணையர் ஹரிதா சப்தகிரி நகர், சுந்தரய்யா நகர், கிராந்தி நகர் பகுதியில் லக்ஷ்மம்மா, குமாரி, சாந்தி, கோமளா கோமாங்கி, மல்லிகா ஆகிய 5 பேரின் பெயருடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கி யார் இவர்கள் என விசாரனை செய்ய புகார் அளித்தார்.

மேலும் திருப்பதி மாநகராட்சி ஆணையர் ஹரிதா போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக அளித்த புகாரின்படி திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் கடந்த 7ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி போலீசார் விசாரணைக்கு பிறகு போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதில் தொடர்புடையதாக தாசில்தார் அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளர்கள் விஜய் குமார், பிரதாப் நாயக், சிவக்குமார் ஆகியோரை பணியில் இருந்து நீக்கம் செய்து தாசில்தார் உத்தரவிட்டுள்ளார்.

The post திருப்பதி மாநகராட்சியில் போலி வாக்காளர்களை சேர்த்த 3 ஒப்பந்த பணியாளர்கள் டிஸ்மிஸ் appeared first on Dinakaran.

Tags : Tirupati Corporation ,Tirumala ,Tahsildar ,Andhra State ,
× RELATED கண்ணமங்கலம் அருகே தம்டகோடி மலையில் தீ