×

சித்தரேவுவில் சேதமடைந்த குடிநீர் தொட்டி அகற்றம்

பட்டிவீரன்பட்டி, நவ. 6: சித்தரேவு ரெங்கராஜபுரம் காலனியில் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்த மேல்நிலை தொட்டி பாதுகாப்பாக அகற்றப்பட்டது பட்டவீரன்பட்டி அருகே சித்தரேவு ஊராட்சிக்குட்பட்டது ரெங்கராஜபுரம் காலனி. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகே 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை குடிநீர்தொட்டி இருந்தது. இந்த தொட்டி மிகவும் சேதடைந்து, இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதனால் அவ்வழியே செல்பவர்கள் அச்சத்துடனே கடந்து வந்தனர்.

இதையடுத்து இந்த தொட்டியை இடித்து அகற்றி விட்டு, வேறு இடத்தில் புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட சித்தரேவு ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. மேலும் அருகில் பள்ளி மற்றும் குடியிருப்புகள் இருப்பதால், குடிநீர் தொட்டியை பாதுகாப்பாக அகற்ற வேண்டும் என்று ஊராட்சி அதிகாரிகளிடம் கிராமமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். இதை ஏற்று ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி, சித்தரேவு ஊராட்சி செயலாளர் சிவராஜன் ஆகியோர் முன்னிலையில், போலீஸ் பாதுகாப்புடன் சேதமடைந்த குடிநீர் தொட்டி இடித்து அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags : Chitarevu ,
× RELATED வத்தலக்குண்டு, ஆத்தூர் ஒன்றியம் அரசு...