×

மங்கூன் துணை மின் நிலைய பகுதியில் இன்று மின்நிறுத்தம்

பெரம்பலூர்,நவ.6: மங்கூன் துணை மின் நிலையத்தில் இன்று (6ம்தேதி) மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக பெரம்பலூர் (கிராமியம்) உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மங்கூன் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் இன்று (6ம் தேதி) நடைபெற இருப்பதால், மங்கூன் துணைமின் லையத்திற்கு உட்பட்ட குரும்பலூர், பாளையம், புது ஆத்தூர், ஈச்சம்பட்டி, மூலக்காடு, இலாடபுரம், அம்மாப்பா ளையம், களரம் பட்டி, மங் கூன், நக்கசேலம், புது அம் மாப்பாளையம், அடைக்கம் பட்டி, டி.களத்தூர் பிரிவு ரோடு, குரூர், மாவிலங்கை, விராலிப்பட்டி, கண்ணப் பாடி, சத்திரமனை, கீழக்க ணவாய், பொம்மனப்பாடி கிராமப்பகுதிகளில் காலை 9மணிமுதல் பராமரிப்புப் பணிகள் நிறைவடையும் நேரம்வரை மின் விநியோ கம் இருக்காது என பெரம்ப லூர் (கிராமியம்) உதவி செயற்பொறியாளர் முத்த மிழ்ச் செல்வன் வெளியிட் டுள்ள அறிவிப்பில் தெரி வித்துள்ளார்.

Tags : station ,Mangun ,
× RELATED மேட்டூர் அனல் மின் நிலையத்தில்...