×

குடியிருப்பு பாதையில் ஆழ்துளை கிணறுகள் மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்துஅறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, நவ. 6 :  பெரம்பூர் செம்பியம் பகுதியில் 8 வீடுகள் கொண்ட டைமண்ட் குடியிருப்பின் பொதுப்பாதையில் இரண்டு ஆழ்துளை கிணறுகள் போடப்பட்டன. ஆனால் தண்ணீர் வராததால் பிளைவுட் மற்றும் கான்கிரீட் போட்டு மேலோட்டமாக இந்த ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மணப்பாறையில் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் மரணமடைந்த சம்பவத்தை தொடர்ந்து, தனியார் குடியிருப்பில் முறையாக மூடப்படாமல் இருக்கும் இரண்டு ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்கக் கோரி குடியிருப்பில் வசிக்கும் ஜி.ஜெயஸ்ரீ என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.அந்த மனுவில் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பயன்படுத்தும் பொதுவழியில் முறையாக மூடப்படாமல் உள்ள, இந்த ஆழ்துளை கிணறுகளை மூடக் கோரி    தமிழக நகராட்சி நிர்வாகத்துறை, சென்னை மாநகராட்சி, செம்பியம் காவல் நிலையத்துக்கு புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு,  வழக்கு விசாரணையை வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags : wells ,Deepal ,Municipal Commissioner ,High Court ,
× RELATED சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட...