×

சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகள், பதாகைகளை அகற்ற மண்டல அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் உத்தரவு

சென்னை : சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகள், பதாகைகளை அகற்ற மண்டல அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். சாலை, பெட்ரோல் பங்க், கல்வி நிலையம் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் கவனம் தேவை என்றும் ஆணையர் தெரிவித்துள்ளார். மும்பையில் ராட்சத பேனர் சரிந்து விழுந்து 14 பேர் உயிரிழந்த நிலையில் சென்னை மாநகராட்சி இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது.

The post சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகள், பதாகைகளை அகற்ற மண்டல அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Municipal Commissioner ,Radhakrishnan ,Dinakaran ,
× RELATED மழை நீர் வடிகால் பணிகள்...