×

திருச்சுழி அருகே வீரசோழனில் குடியிருப்பு பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி புகார் மனு

விருதுநகர், நவ.5:வீரசோழனில் டாஸ்மாக் கடையை இடமாற்றம், ரவுடிகள் மூலம் அராஜகம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வீரசோழன் கிராம மக்கள் மனு கலெக்டர் அலுவலகத்தில மனு அளிக்க வந்தனர்.
வீரசோழன்  கிராம பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த மனுக்களில் தெரிவித்திருப்பதாவது, வீரசோழன் தெற்கு  தெருவில் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இதை இடமாற்றம் செய்யக்கோரி  பல மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. கோவில், குடியிருப்பு, பள்ளிகள்  இருப்பதால் பெண்கள், மாணவிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். பார் வசதி  உடைய கடையாக இருப்பதால் காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை விதிகளை மீறி  கடையிலும், பாரிலும் மதுவிற்பனை நடக்கிறது. அதிகாலையில் பெண்கள் வாசலை  சுத்தம் செய்ய அஞ்சுகின்றனர். குடியிருப்பு பகுதியில் செயல்படும்  மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மற்றொரு  மனுவில், வீரசோழனில் அனைத்து சமுதாய, சமூக மக்கள் ஒற்றுமையுடன் வசித்து  வருகின்றனர். சில வருடங்களுக்கு முன் குடியேறிய திருமூர்த்தி, லட்சுமணன்  இருவரும் அனைத்து சமுதாய மக்களை அடிப்பதும், கொலை மிரட்டல் விடுத்து  வருகின்றனர். கிராம மக்கள் உடமைக்கு இழப்பு ஏற்படுத்தி வருகின்றனர்.  திருட்டு மணலில் பெரும் பணம் சம்பாதித்துள்ள இருவராலும் அமைதியாக இருந்த  வீரசோழன் கிராமத்தில் தினசரி பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இருவர்  மீதும் வீரசோழன், கமுதி, அபிராமம் போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள்  உள்ளன. இருவரின் செயல்களால் கிராம பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல்  உருவாகி உள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.


Tags : removal ,Task Shop ,Tiruchi ,Veerazholan ,
× RELATED திருச்சி எ.புதூரில் பைக் திருடன் கைது