×

தமிழகத்தில் டெங்கு கட்டுக்குள் உள்ளது அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

புதுக்கோட்டை, நவ.5: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேமோகிராம் என்று அழைக்கப்படும் மார்பக புற்றுநோயை கண்டறிவதற்கான கருவியை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக முதல்வரின் சிறப்பு மனுநீதி முகாம் திட்டத்தின் கீழ் 73சதவீத மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 50 ஆயிரத்து 627 மனுக்கள் பெறப்பட்டு அதில் 7030 மனுக்கள் தீர்வு காணப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்தபடி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று அந்த கருவியை இயக்கி வைக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் தொற்றாநோய் தங்களுக்கு உள்ளதா என்பதை 30 வயதுக்கு உட்பட்ட பெண்கள் ஒரு வருடத்திற்கு ஒருமுறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று மேமோகிராம் கருவி மூலம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு இருந்த நிலையை விட தற்போது காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது என்றார்.

Tags : Minister Vijayabaskar ,Tamil Nadu ,
× RELATED பச்சிளம் குழந்தைகள் இறப்பு 15 சதவீதமாக குறைவு: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி