×

பெரம்பலூரில் கடந்த ஓராண்டில் 7 ஆயிரம் அஞ்சலக சேமிப்பு கணக்கு துவக்கம் ஆய்வாளர் தகவல்

பெரம்பலூர்,நவ.5:பெரம்ப லூரில் கடந்த ஓராண்டில் மட்டும் 7ஆயிரம் அஞ்சலக சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட் டுள்ளதாக அஞ்சல் ஆய்வாளர் விஜய் பாலாஜி தெரிவித்தார். மக்களிடையே சிக்கன சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில்,சிறு சேமிப்பை ஊக்குவிப்பதற்காக அக்.30ம்தேதிமுதல் உலக சிக்கன தினம் கடை பிடிக்கப்பட்டு வருகிறது.  அதன்படி, தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்களுக்கு முன்மாதிரியாக அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கை தொடங்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். இதனடிப்படையில் பெரம்பலூரில் அஞ்சலக சேமிப்புக் கணக்கு தொடங்கும் நிகழ்ச்சி நடந்தது. குன்னம் சட்ட மன்றத் தொகுதி எம்எல்ஏ ராமச்சந்திரன் அஞ்சலக சேமிப்பு மற்றும் இந்திய அஞ்சலக வங்கி புதிய கணக்குகள் தொட ங்கும் களப்பணியை தொடங்கி வைத்து மேற்க ண்ட திட்டங்களில் இணைந்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அஞ்சலக ஆய்வாளர் விஜய்பாலாஜி முன்னிலை வகித்துப் பேசுகை யில், அஞ்சலக ஆணையரின் உத்தரவின்பேரில் கட ந்த 2108ம் ஆண்டு செப் 1ம் தேதி அஞ்சல சேமிப்புக் கணக்குகள் தொடங்கும் பணி முடுக்கிவிடப்பட் டது. கடந்த செப் 31ம் தேதி வரை 7 ஆயிரம் அஞ்சலக சேமிப்பு மற்றும் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. பொதுமக்களிடையே சேமிக்கும் வழக்கத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்த பொதுமக்களிடம் நேரடியாக சென்று சேமிப்பு கணக்குகள் தொடங்க களப்பணிகள் நடைபெற்று வருகிறது என்றார். நிகழ்ச்சியில் பெரம்பலூர் தலைமை அஞ்சலக அலுவலர் தங்கராஜு, அஞ்சல் வங்கி பெரம்பலூர் மேலாளர் நிவேதா மற்றும் அஞ்சல் ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags : Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி