×

திருவில்லிபுத்தூர் பஸ்ஸ்டாண்டில் திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணறு மூடப்பட்டது

திருவில்லிபுத்தூர், நவ.1: ‘தினகரன்’ நாளிதழ் செய்தி எதிரொலியாக திருவில்லிபுத்தூர் பஸ்ஸ்டாண்டில் திறந்தநிலையில் இருந்த ஆழ்துளை கிணறு மூடப்பட்டது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் ஏராளமான பயணிகள், பொதுமக்கள் தினமும் வந்து செல்கின்றனர். இங்கு மதுரை, திருச்சி, சென்னை போன்ற இடங்களுக்குச் செல்லும் பஸ்கள் நிற்கும் பகுதியில் திறந்தநிலையில் ஆழ்துளை கிணறு உள்ளது. இதனால் பொதுமக்களிடையே அச்சம் நிலவியது. இந்த ஆழ்துளை கிணற்றை உடனடியாக மூட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து ‘தினகரன்’ நாளிதழிலும் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக திருவில்லிபுத்தூர் தாசில்தார் கிருஷ்ணவேணி, வருவாய் துறை ஆய்வாளர் பால்துரை ஆகியோர் இந்த ஆழ்துளை கிணற்றை ஆய்வு செய்தனர். பின்னர் அதிகாரிகள் முன்னிலையில் இந்த ஆழ்துளை கிணற்றை கான்கிரீட் கலவை மூலம் பணியாளர்கள் அடைத்தனர். இதனால் பயணிகள் நிம்மதியடைந்தனர்.

Tags : well ,Thiruviliputhur ,bus stand ,
× RELATED நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் மூலம்...