×

சாரல் மழையால் தேனியில் ஜில்’

தேனி, நவ.1: தேனியில் நேற்று சாரல்மழை பெய்ததால் நகர் முழுவதும் ஜில்லென இருந்துது. தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரகாலத்திற்கும் மேலாக பருவமழை பெய்து வருகிறது. இதில் செவ்வாய்க்கிழமை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் விடிய, விடிய மழை பெய்த காரணத்தினால் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் பல்லவிபல்தேவ் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தார்.

இந்நிலையில் நேற்றும் தேனியில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருள்சூழ்ந்து காணப்பட்டது. காலையிலிருந்து அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது. இதனால் கொடைக்கானலை நினைவு படுத்தும்வகையில் தேனி நகரில் நேற்று முழுவதும் குளிர்ச்சியாக ஜில்லென இருந்தது.

Tags : Jill ,
× RELATED மக்களுக்கு ஓர் ஜில் அறிவிப்பு!: மே...