×

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் குடியிருப்புவாசிகள் அவதி

உடுமலை, நவ.1:உடுமலையில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் சாக்கடை கால்வாய்கள் மற்றும் பாதாள சாக்கடை சேம்பர்கள் நிரம்பி கழிவுநீர் வெளியேறுகிறது.பழனியாண்டவர் நகர், முனியன் நகர் பகுதியில் இருபுறமும் சாக்கடை கால்வாய் நிரம்பி, மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து சாலையில் ஆறாக பாய்கிறது. கடந்த ஒரு வாரமாக இந்நிலை உள்ளது.இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் கழிவுநீரை மிதித்தபடிதான் வீடுகளுக்கு செல்ல வேண்டி உள்ளது. மேலும் கழிவுநீரில் புழுக்களும் நெளிகின்றன. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்களும் பெருகி உள்ளன. தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், வாகனத்தில் செல்வோரும் சிரமப்படுகின்றனர்.இதுபற்றி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இனியும் தாமதிக்காமல் இப்பகுதியில் தேங்கிய கழிவுநீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sewerage residents ,road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி