×

தனியார் வேலைவாய்ப்பு முகாம்

கோவை, நவ. 1: கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணி முதல் மதியம் 2 மணி வரை தனியார் துறையில் வேலைவாய்ப்புக்கு வேலை அளிப்போர், வேலை தேடுவோர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.வேலைவாய்ப்பு முகாமில், படிக்காதவர்கள் முதல் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, அனைத்து பட்டதாரிகள், முதுகலை படித்தவர்கள், ஐ.டி.ஐ. படிப்பு பயின்று சான்றிதழ் பெற்றவர்கள், டிப்ளமோ கல்வித்தகுதி உடையவர்கள், ஓட்டுநர்கள், பிட்டர், டர்னர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் போன்ற தொழிற்கல்வி பயின்றவர் வரை என அனைத்து கல்வித் தகுதி உடையவர்களுக்கும் கலந்து கொள்ளலாம்.முகாமில் வேலைவாய்ப்பு பெறுபவர்களிடம் இருந்து எந்தவித கட்டணமும் வாங்கப்படமாட்டாது. மேலும், வேலை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இந்த முகாம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Tags : Private Placement Camp ,
× RELATED திருச்சியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்