×

ஆலங்குளம் அருகே பரபரப்பு பள்ளி முன்பு திடீர் பள்ளம்

ஆலங்குளம், அக்.31:  ஆலங்குளம் அருகே பள்ளி முன்பு  திடீர் பள்ளம் ஏற்பட்டது. ஆலங்குளம் அருகேயுள்ள குருவன்கோட்டையில் இந்து தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். அந்த பள்ளி முன்பாக மைதானமும் ஒரு கிணறும் உள்ளது. நேற்று இந்த கிணறு அருகே சில மீட்டர் தொலைவில் 2 அடி விட்டம் 6 அடி உயரத்தில் திடீர் பள்ளம் தோன்றியது. ஆலங்குளம் வட்டாரத்தில் மிதமான மழை பெய்து கொண்டிருப்பதால் மண் அரிப்பால் பள்ளம் தோன்றியிருக்கும் என பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேசபட்டது. ஆனால் இதில் தண்ணீர் சென்ற எந்த அறிகுறியும் தென்படாததால் இது குறித்து பொதுமக்கள் ஆலங்குளம் போலீசிற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் ஆலங்குளம் எஸ்.ஐக்கள் கிருஷ்ணன், சுரேஷ் மற்றும் போலீசார் குருவன்கோட்டை சென்று ஆய்வு செய்தனர். பின்பு ஜேசிபி மூலம் கற்கள், சரள்கள் கொண்டு பள்ளம் மூடப்பட்டது. பள்ளி முன்பு ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் குருவன்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Parabharam School ,abyss ,Alangulam ,
× RELATED பள்ளத்தில் விழுந்து வாலிபர் பரிதாப பலி