×

தூத்தூர் பொன்னார் பாலம் விரைவாக சீரமைத்து பயன்பாட்டுக்கு வரும் அரசு தலைமை கொறடா உறுதி

அரியலூர், அக். 31: திருமானூர் ஒன்றியம் தூத்தூர் கிராமத்தில் உள்ள பொன்னார் வாய்க்கால் இடையே சேதமடைந்த பாலததை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தனர். அப்போது பொன்னார் பாலம் விரைவாக சீரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என்று அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் உறுதியளித்தார். அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள குருவாடி கிராமத்தில் கொள்ளிடத்தில் இருந்து பொன்னார் பிரதான வாய்க்கால் பிரிந்து தா.பழூர் பகுதி வரை 4,694 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பொன்னார் வாய்க்காலில் இருந்து 2,500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள தூத்தூர் பாலம் சமீபத்தில் பெய்த மழையால் சேதமடைந்துள்ளது.  பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் இப்பாலம் 1925ல் கட்டப்பட்ட பழமையான பாலம். இந்த பாலம் செங்கல், சுண்ணாம்பு கலவையால் ஆர்ச்சி வடிவத்தில் இரண்டு வழித்தளத்துடன் கட்டப்பட்டுள்ளது. இப்பாலம் சேதமடைந்ததையொட்டி இவ்வழியாக செல்லும் வாகனங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த பாலத்தை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார். அப்போது விரைவில் தற்காலிகமாக சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இப்பாலம் புதிதாக கட்டுவதற்கு முதல்வருக்கு பரிந்துரை செய்து துரிதமாக பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் கூறினார்.
ஆய்வின்போது செயற்பொறியாளர் தட்சிணாமூர்த்தி, உதவி செயற்பொறியாளர்கள் சாந்தி, ராஜா சிதம்பரம் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Government ,bridge ,
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...