×

பெரம்பலூரில் 6 அடி நீளத்திற்கு காய்த்த அதிசய புடலங்காய் பொதுமக்கள் வியப்பு

பெரம்பலூர், அக்.31: பெரம்பலூரில் சாலை ஆய்வாளர் வீட்டில் 6 அடி நீளத்திற்குமேல் காய்த்து தொங்கும் அதிசய புடலங்காய் காண்போரை வியக்க வைத்தது. பெரம்பலூர் நகராட்சி, துறைமங்கலம் பகுதியிலுள்ள அரசுஅலுவலர் குடி யிருப்பில் சி-பிளாக்கில் வசித்து வருபவர் செல்வராஜ்(45).இவர் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையில் சாலை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி விஜி புளோரா ரெஜி. இவர்கள் தங்கள் குடியிருப்பின் அருகே உள்ள காலிமனையில் காய்கறி தோட்டம் அமைத்துள்ளனர். இதற்காக கொடிவகைக் காய்களைப் பயிரிட ஏதுவாக பந்தல் அமைத்துள்ளனர். இதில் சில வாரங்களுக்கு முன்பு புடலங்காய் நாட்டு விதைகளை வாங்கி வந்து ஊன்றிவைத்து, அதற்கு ரசாயணக் கலப்பில்லா இயற்கைவழி சத்துக்களை ஊட்டத்திற்காக இட்டு வளர் த்து வந்தனர். இதில் வழக்கமாக ஒருமுழ, 2முழ நீளத்திற்கு நீளமாக வளரும் புடலங்காய் அதிச யமாக 6அடி நீளத்திற்கு நீண்டு வளர்ந்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த் தியுள்ளது. இந்த ஒரே ஒரு புடலங்காயே ஒருகிலோ எடைக்குமேல் அதிக எடை கொண்டதாக காணப்படுகிறது. முன்னோடி விவசாயியைப்போல் இல்லாமல் சாதாரணமாக, அதேநேரம் சத்துள்ள இயற்கை ஊட்டங்களை அளித்ததால் மிக நீண்டு வளர்ந்துள்ளது. இதனை அரசு குடியிருப்பில் வசிப்போர் அதிசயமாகப் பார்த்து வியந்து செல்லுகின்றனர். மேலும் சமைக்கவும், விதைக்கவும் ஆர்வமு டன், வளர்க்க தேவையான வழிமுறைகளையும் கேட்டுச் செல்லுகின்றனர்.

Tags : public ,Perambalur ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...