×

ஒடசல்பட்டி ஏரிக்கு செல்லும் கால்வாய்களை தூர்வார வேண்டும்

கடத்தூர், அக்.31: கடத்தூர் அருகே ஒடசல்பட்டி ஏரிக்கு செல்லும், மழைநீர் கால்வாய்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடத்தூர் அருகே ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியில், தர்மபுரி- மொரப்பூர் நெடுஞ்சாலை ஓரத்தில், 50 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. மணியம்பாடி, அய்யன்மலை பகுதி வழியாக மழை நீர் கால்வாய்கள் வழியாக, மழைக்காலங்களில் உபரி நீர் ஏரிக்கு வரும். தற்போது மணியம்பாடி, ஆலமரத்துப்பட்டி, பத்தளஅள்ளி, சசேக்காண்டஅள்ளி, கதிர்நாயக்னள்ளி, பத்தலஅள்ளி, ஒடசல்பட்டி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்புகிறது.

இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது. தற்போது மழைநீர் கால்வாய்களில் முட் செடிகள் வளர்ந்து, புதர் மண்டிய நிலையில் உள்ளது.இதனால் ஏரிகளுக்கு மழைநீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கால்வாய்களை தூர்வார பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Odasalpatti Lake ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா