×

மாவட்டத்தில் தொடர்ந்து மழை

தர்மபுரி, அக்.31: வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் சாரல் மழை பெய்து. நேற்று பகலிலும் சாரல் மழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. காலையில் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு சென்றவர்கள் மழையில் நனைந்தபடியும், ரெயின்கோட் அணிந்தபடியும் வாகனங்களில் சென்றனர். விட்டு விட்டு மழை பெய்துக்கொண்டே இருந்தால், தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது. வெண்ணாம்பட்டி வீட்டுவசதி வாரிய குடியிருப்புசாலை, ராமன்நகர் சாலை உள்ளிட்ட பகுதியில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியது. நேற்று காலை மழையின் பதிவு விபரம்: ஒகேனக்கல்- 82 மில்லி மீட்டர், பென்னாகரம்- 54 மி.மீ, பாப்பிரெட்டிப்பட்டி- 50 மி.மீ,  அரூர்- 24 மி.மீ, மாரண்டஅள்ளி- 18 மி.மீ, பாலக்கோடு-16 மி.மீ, தர்மபுரி- 13 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Tags : district ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...